SHARE
The autumn flower of sun flare.
0
0

நான் வாரத்தில் ஒரு நாள் மனிதனாவேன் !

எப்போதும் இயந்திரத்தோடே பணியாற்றி கொண்டிருக்கும் தொழில்நுட்ப மாணவன் நான்.இன்று ஞாயிறுக்கிழமை,விடுதலை நாள்.ஞாயிறுகளில் நான் என்னையே ஆராய்ந்து பார்ப்பேன்.இயற்கையோடு கதை பேசுவேன்,புத்தகத்தோடு உரையாடுவேன்,வெற்றிக்கு என்னை அறிமுகம் செய்து வைக்க எத்தனிப்பேன் !

மாலை நேரத்தில் மண்ணோடு உரையாடி கொண்டே ஒத்தையடி பாதையில் காற்றோடு கதை பேசி கொண்டு சென்றேன்.அந்த மலைகள் ,ஆதவனை மறைக்கும் மேகங்கள்,ஆனந்த குளிர் காற்று …அடடா எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என எண்ணி மகிழ்ந்தேன்!

நெடுதூரம் நடந்து வந்த களைப்பு.அதோ !தாகம் தணிக்க ஒரு தேனீர் கடை.களைத்து போன நாவினை தேனீரில் குளிரவைத்தேன்.தீடிரென்று ஏதோ ஒன்று என் கால்களை சுரண்டுவது போல் உணர்வு.குனிந்து பார்த்தேன்.கால் இரண்டும் இல்லாத ஒருவன் கை இரண்டையும் கூப்பி கண் கலங்கி நின்றான்.கூப்பிய அவன் கைகளுக்கு கிடைத்தது 5 காசுகள் மட்டுமல்ல இரண்டு கண்ணீர் துளிகளும் தான்.கனத்த இதயத்தோடு மெல்ல அவ்விடம் விட்டு நகர்த்தேன்.!

என் சிந்தனையின் ஆழம் உணர பார்த்தேன்,சமுதாயத்தின் வறுமை நோய் எப்போது தீரும் என்று என் மனமென்னும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன்.

என் அடுத்த எழுத்து பிறக்கப்போகும் இந்த ஒரு நொடியில் கூட உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் ஒரு உயிர் வறுமைக்கு பலியாகிக்கொண்டிருக்கிறது.உலகத்தில் மூன்றில் ஒரு பங்கு ஏழை மக்கள் இருப்பது இந்தியாவில் தானம்,எங்கோ படித்த அறிக்கை நினைவுக்கு வருகிறது.

எத்தியோப்பியா,சோமாலியா மக்களின் நிலை கண்டு நாம்எத்தனை முறை கண்ணீர் விட்டிருப்போம்!பொழுதுக்கு பொழுது வித விதமான உணவுகளை உண்ணும் மக்கள் வாழ்கின்ற இதே உலகத்தில் தான்,பசிக்காக மனித கழிவுகளேயே உன்ன முற்பட்ட சபிக்கப்பட்ட மனிதர்களும் வாழ்ந்தார்கள்.

கொஞ்சம் பொறுங்கள்!உடனே இறைவனை பழிக்காதீர்கள்.இந்த நிலைமைக்கு கரணம் இறைவன் அல்ல,சகமனிதர்கள் தான்.சுயநலம் பொதுநலத்தை கொன்றுவிடுகிறது.

நம்மால் இந்த உலகத்தை மாற்ற முடியாது தோழமைகளே.ஆனால் நம்மை சுற்றி உள்ள சூழ்நிலையை மாற்றலாம்.சின்ன சின்ன விசயங்கள் பெரிய மாற்றத்தை கொண்டு வரலாம்.

நீங்கள் கல்லூரிக்கு செல்லும் வழியில் நாதியற்று ரோட்டோரத்தில் உறங்கி கொண்டிருக்கிறாரே முதியவர் அவர்க்கு காலை மாலை உணவு கொடுங்கள்!

உங்கள் பகுதியில் ஓர் முதியோர் இல்லம் இருக்கிறதே,அங்கு சென்று காயம்பட்டவர்களுக்கு மருந்தாக இருங்கள்!

வாரத்தில் ஒரு நாள் வசதியின் அர்த்தம் அறியாத பிஞ்சு குழந்தைகளிடம் சென்று ஊக்கம் கொடுங்கள்.

கல்வியின் சுவடு கூட படாத பாமர மக்களுக்கு மாதம் ஒரு நாள் ஆவது வகுப்பெடுங்கள்!

உங்கள் தேனீரில் தவறியது ஒரு சிறிய பிஸ்கட்டாக இருக்கலாம்,அனால் இந்த உலகத்தில் அது யாரோ ஒருவருக்கு காலை உணவாக இருக்க கூடும்.

நான் உங்களை சாக்கரடீஸ் ஆக வற்புறுத்தவில்லை ,சக மனிதனுக்கு முயற்சிக்கிறேன்.

மாற்றத்தை வெளியில் தேடவேண்டாம்.ஏனென்றால் அது உங்களிடம் இருந்து பிறக்க வேண்டியது !

உங்களை சுற்றி ஒரு மகிழ்ச்சியான உலகத்தை உருவாக்கி கொள்ளுங்கள்!

வலியில் உள்ளவர்களுக்கு ஆறுதல் அளிப்பதே மகிழ்ச்சிக்கான வழியாக நான் கருதுகிறேன்!

மகிழ்ச்சியும் அன்பும் பெறுவதில் இல்லை,கொடுப்பதில் இருக்கிறது!

மனிதனாகும் முயற்சியில் உங்களோடு நான்….

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here